பொருட்களின் விலை குறைப்பு!

புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குகளின் மொத்த விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் ஒரு கிலோ 130 ரூபா என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் புதிய மொத்த விலை 100 ரூபாவாகும். இதேவேளை இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 205 ரூபாவாக குறைந்துள்ளது.